பட்டதாரிபயிலுனர்களைஅரசசேவைகளில் இணைப்பதற்கானஇரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளன - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 18 ஜூன், 2018

பட்டதாரிபயிலுனர்களைஅரசசேவைகளில் இணைப்பதற்கானஇரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளன

பட்டதாரிபயிலுனர்களைஅரசசேவைகளில் இணைப்பதற்கானஇரண்டாம் கட்ட விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளன – முடிவுத்திகதி10.07.2018

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சினால் கடந்த ஆண்டு முதற்கட்டமாக பட்டதாரி பயிலுனர்களை அரச சேவைகளில் இணைப்பதற்கான விணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வும் நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்படப்போகும் பட்டதாரிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பயிற்சிக்கான நியமனங்களை பெறவுள்ள நிலையில், அரசாங்கம் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை கோரியுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்??

எதிர்வரும் 30.06.2018 ம் திகதியில் 45 வயதுக்குக் குறைந்த ஆனால், அதே திகதிக்கு முன் (30.06.2018 ) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரிகள்.

எப்படி விண்ணப்பிப்பது ??

உங்கள் நிரந்தர  வதிவிடத்துக்கான பிரதேச செயலகத்தில் நாளை முதல் எதிர்வரும் 10.07.2018, மாலை 4 மணிவரை உங்கள் அடையாள அட்டையையும், உங்கள் பட்டச் சான்றிதழையும் சமர்ப்பித்து உங்களுக்கான பொருத்தமான நேர்முகப்பரீட்சை திகதி, நேரம் என்பவற்றை (ஜூலை இருபதாம் திகதிக்குள் நேர்முகப்பரீட்சைகள் இடம்பெறும் எனத் தெரிகிறது) பெற்றுக்கொள்ளவும். நேர்முகப்பரீட்சையில் உறுதிப்படுத்தப்பட்ட உங்கள் அடையாள அட்டை மற்றும் பட்டச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்போது இணைத்துகொள்ளப்படவுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை  15000 ஆகும். ஆனால், அதற்கு மேலதிகமான அதேவளை, பதிவு செய்து நேர்முகப்பரீட்சைக்கு தோற்றும் ஏனைய பட்டதாரிகள் 2019 ஆம் ஆண்டில் மூன்றாம், நான்காம் கட்டங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதால் தயவு செய்து தகுதியான அனைவரும் பதிவு செய்து, 
நேர்முகப்பரீட்சையை எதிர்கொள்ளுங்கள்.

Post Bottom Ad

Responsive Ads Here

Pages